சென்னை:கே.ஆர். பெரியகருப்பன், ஊரக வளர்ச்சித் துறையின் பணிகள் மேம்பாடு குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரகத்தில் நேற்று (அக்டோபர் 18) ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
இக்கூட்டத்தில் அரசினால் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு ஊரக வளர்ச்சித் துறை அறிவிப்புகளைச் செயல்படுத்துதல், அதன் தற்போதைய நிலை, பணிகளின் முன்னேற்றம், நிதிநிலை குறித்து ஆய்வினை மேற்கொண்டார்.
வளர்ச்சித் திட்டங்கள்
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் ஊரக வளர்ச்சித் துறையினால் எடுக்கப்பட்ட, எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட பணிகள், முன்னேற்ற நிலை குறித்து ஆய்வுசெய்தார்.
மேலும் அரசின் வீடுகள் வழங்கும் திட்டத்தின் பயனாளிகள் தேர்வு, வீடு கட்டும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் - விரைந்து முடிப்பதற்கான வழிமுறைகள், சமத்துவபுரம் பணிகள், ஊரக சாலைகள் மேம்பாடு, ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முன்னேற்ற விவரம், தூய்மை பாரத இயக்கப் பணிகள் போன்றவற்றை ஆய்வுசெய்தார்.