தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'23ஆம் புலிகேசியின் அரசியல் வடிவம் ஸ்டாலின்' - அமைச்சர் கிண்டல் - கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சென்னை: இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்பட நாயகனின் அரசியல் வடிவமாகத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திகழ்வதாகத் தமிழ்ப் பண்பாடுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் கிண்டல் செய்துள்ளார்.

minister pandiyarajan slams dmk leader stalin
minister pandiyarajan slams dmk leader stalin

By

Published : May 16, 2020, 12:35 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடுத் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஊர் சிரிக்கிறது

அதில், "மக்கள் மீது அக்கறை உள்ளதுபோல் நாடகமாடும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கரோனா நோய்த்தொற்றின் வழியாகவாவது ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துவிட மாட்டோமா என்று ஒவ்வொரு நாளும் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்து ஊர் சிரிக்கிறது.

உலக நாடுகளை ஆட்டிப்படைக்கிறது கரோனா. வல்லரசு நாடுகள் முதல் சின்னஞ்சிறிய நாடுகள்வரை இதற்கு விதிவிலக்கல்ல. இந்த நோயின் கோரப்பிடியில் மக்கள் எப்படி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி எட்டுத் திசையிலுமிருந்து வரும் செய்திகளை ஒவ்வொரு மணி நேரமும் தொலைக்காட்சிகளில், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஸ்டாலின் கவலை?

அந்தக் காட்சிகளையும், நோயுற்றோரின் எண்ணிக்கைகளையும் தமிழ்நாட்டின் நிலவரத்தோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளால் கரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதைக் கண்டும், இறந்தோர் எண்ணிக்கை மிகக் குறைவாக, கட்டுக்குள் இருப்பதைக் கண்டும் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.

இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின். திமுக ஆட்சிக் காலத்தைப்போல...

  • அரிசி பஞ்சம்,
  • பதுக்கல் சாம்ராஜ்யம்,
  • அமைச்சர்களின் மறைமுக பேரங்கள்,
  • 20 மணி நேர மின்வெட்டு,
  • தண்ணீர்ப்பஞ்சம்,
  • மக்களின் கையில் ஒரு ரூபாய்க்கும் வழியில்லாத பணத்தட்டுப்பாடு

என்பன இன்றைக்கு இல்லையே என்பதுதான் ஸ்டாலினுக்கு கவலையாக இருக்கிறது.

23ஆம் புலிகேசி ஸ்டாலின்!

அத்தகைய இருண்டகாலம் ஒருபோதும் இனி தமிழ்நாட்டிற்கு வராது. கரோனா போன்ற பெருந்தொற்று நேரத்திலும் மக்களைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்தோடு, கட்டுக்கோப்புடன் நடைபெறும் ஆட்சியாகத் தமிழ்நாடு அரசு திகழ்கிறது.

வெற்றுக் கதைகளைப் பேசி, சிறுபிள்ளைத்தனமாக நாடகங்களை நடத்தி, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்பட நாயகனின் அரசியல் வடிவமாகத் திகழும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னிலை உணரட்டும்.

இந்த கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை என்ற திரைப்பட வசனம் இன்று தன்னை நோக்கி மக்களால் பேசப்படுவதை இனியேனும் ஸ்டாலின் செவிகொடுத்துக் கேட்கட்டும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அரசை திமுக செயல்படவைக்கும் - மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details