நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழ்நாட்டில் அரசியல் கட்சித்தலைவர்கள் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் வேணுகோபால், பூவிருந்தவல்லி இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர் வைத்தியநாதன் ஆகிய இருவரையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அமமுகவிற்கு கூடும் கூட்டம் போலியானது: அமைச்சர் பாண்டியராஜன் - அமமுக
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு கூடும் கூட்டம் போலியானது எனஅமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
அமைச்ச்ர் பாண்டியராஜன்
ட்ரங்க் சாலையில் தொடங்கி,ஜேம்ஸ் சாலை, சீனிவாச நகர் என நகர் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபாண்டியராஜன் பேசுகையில், பூவிருந்தவல்லி நகர பாதாள சாக்கடைத் திட்டம், திருமழிசை துணை கோல் நகர திட்டம் விரைந்து முடிக்கப்படும் என்றுதெரிவித்தார்.
அதேபோல் காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டை தரம் உயர்த்தப்படும் என உறுதியளித்த பாண்டியராஜன், பூவிருந்தவல்லியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு கூடும் கூட்டம் போலியானது எனப் பேசினார்.