சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்டப் பகுதிகளில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தொற்று தடுப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து களப் பணியாளர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது, "தண்டையார்பேட்டை மண்டலத்தில் தினமும் 200க்கும் மேற்பட்டோருக்கு சோதனை செய்யப்படுகிறது. மக்கள் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று குறித்து பரிசோதனை செய்து கொள்ளலாம். அரசு மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப இடங்கள் உள்ளன.
நியாய விலைக்கடைகளில் மக்களுக்கு கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாயை வீட்டில் தான், கொண்டு போய் கொடுக்க வேண்டும். இதைத்தவிர பொதுமக்களை அழைத்து கடைகளுக்கு முன் கொடுப்பது சட்டப்படி குற்றம்.