தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் சென்னை திரும்பினார் - central minister l murugan

ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்றப் பின் எல்.முருகன் இன்று டெல்லியிலிருந்து சென்னை திரும்பினார்.

எல்.முருகன் சென்னை வருகை
எல்.முருகன் சென்னை வருகை

By

Published : Jul 16, 2021, 11:19 AM IST

Updated : Jul 16, 2021, 1:57 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் ஜூலை 7ஆம் தேதி டெல்லியில் தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளம் ஆகிய துறைகளுக்கு ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இதையடுத்து இன்று (ஜூலை 16) டெல்லியிலிருந்து விஸ்த்தாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை விமான நிலையத்தில் பாஜகவினர் அவருக்கு மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க:ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார் எல். முருகன்!

Last Updated : Jul 16, 2021, 1:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details