தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்மா இருசக்கர வாகனத் திட்டம் ரத்து ஏன்? - அமைச்சர் பெரியகருப்பனின் பலே விளக்கம் - அம்மா இருசக்கர வாகன திட்டம் ரத்து ஏன் என அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்

அதிமுக அரசு கொண்டு வந்த அம்மா இருசக்கர வாகனத்திட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பெரியகருப்பன் விளக்கமளித்தார்.

அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்
அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்

By

Published : Apr 7, 2022, 7:03 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில்பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு நேற்று (ஏப்ரல் 6) தொடங்கியது. துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 7) அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா இருசக்கர வாகனத் திட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன் என பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அமைச்சர் பெரியகருப்பன் பதிலளித்துப் பேசினார். அப்போது, "அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் முடக்கப்பட்டது ஏன் என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மகளிருக்கான இருசக்கர வாகனத் திட்டத்தை தொடர்ந்தால், அது மகளிருக்கு கூடுதல் சுமையாக இருக்கும்.

அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்

மேலும், திமுக ஆட்சியில் நகரப்பேருந்தில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ளத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இலவச பயணம் அறிவிப்பின் மூலம் இரு சக்கர வாகனத் திட்டத்திற்கான தேவை குறைந்துள்ளது. பேருந்தில் இலவச பயணத்திட்டமே மகளிருக்கு உதவியாக இருக்கும்" என்றார்.

அம்மா இருசக்கர வாகனத் திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 3 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயம் - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

ABOUT THE AUTHOR

...view details