சென்னை: வணிக வரித்துறையில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகளைத்தொடர்ந்து வரி வருவாய் அதிகமாகிக்கொண்டே வருகிறது.
1.4.2022 முதல் 30.9.2022 வரையிலான காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வரி வருவாய் ரூ.66,161 கோடி ஆகும். இது கடந்த ஆண்டில் இதே நாள் வரை வசூலிக்கப்பட்ட ரூ. 47,873 கோடியை விட ரூ. 18,288 கோடி அதிகமாகும்.
வணிகவரி வசூலில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது. இதைப்போலவே பதிவுத்துறையிலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவாக இதுவரை இல்லாத அளவில் வசூல் சாதனை எட்டப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் மட்டும் வசூல் ரூபாய் 1,610 கோடியைத் தாண்டியுள்ளது.