சென்னை: 2021-2022ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (செப்டம்பர் 3) நடைபெற்றது.
அப்போது சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறையின் புதிய அறிவிப்புகள் குறித்து வீ. மெய்யநாதன் பேசுகையில், "புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு செட்டிக்குளத்தின் கரையை மேம்படுத்தி பூங்கா அமைக்க ஏழு கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் பசுமைப் பூங்கா அமைத்து சாலை வசதியை மேம்படுத்த இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
புதுக்கோட்டை நகராட்சி புதுக்குளம் ஏரியைப் புனரமைத்து மேம்படுத்த ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படும். மாபெரும் மரம் நடும் திட்டத்திற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை மெரினா கடற்கரை 20 கோடி ரூபாய் செலவில் அழகுப்படுத்தப்படும்.