சென்னை:ட்ரீம் ரன்னர்ஸ் நடத்திய மெய்நிகர் மாரத்தானில் இன்று (அக். 8) மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டு ஓடினார்.
பெசன்ட் நகரில் தொடங்கி சாந்தோம், தலைமைச் செயலகம் வழியாக மெரினா வந்தடைந்து 21.1 கி.மீ. தூரத்தை 2 மணி நேரம் 20 நிமிடத்தில் ஓடி தனது 131ஆவது மாரத்தானை நிறைவுசெய்து பதக்கம் வென்றார்.
மாரத்தானிற்கான காரணம்
மாரத்தான் ஓட்டத்திற்குப் பிறகு செய்தியாளரிடம் பேசிய அமைச்சர், "இளைஞர்களுக்கு உடற்பயிற்சி செய்வதில் முன்மாதிரியாக, தாம் வாழ்ந்த 95 வயதிலும் உடற்பயிற்சி, யோகா செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் கருணாநிதி. அவர் வழியில் முதலமைச்சர் ஸ்டாலினும் உடற்பயிற்சி, சைக்கிளிங் செய்துவருகிறார்.
நான் 20 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, 2004ஆம் ஆண்டு நடந்த ஒரு பெரும் விபத்தில் தலையிலும், காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் ஓடக் கூடாது எனக் கூறினார்கள். அதன்பின் குணமடைந்து யோகா செய்ய ஆரம்பித்தேன். 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுச்சேரியில் மாரத்தான் ஓடத்தொடங்கி இன்று 131ஆவது மாரத்தானை நிறைவுசெய்துள்ளேன்.