சென்னை:'வீடு தேடி தடுப்பூசி' திட்டத்தின் கீழ் சென்னை பட்டினப்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது, "தடுப்பூசி செலுத்துவதில் ஒருவரை கூட தவறவிட்டுவிடக் கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியதின் பேரில் வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 65 லட்சம் பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர் . இதுவரை முதல் தவனை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்களை கண்டறியப்பட்டு வீடு தேடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தப்படும். பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா தொற்று 30 ஆயிரத்தை கடந்து அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் பெரிய அளவிலான அச்சுறுத்தல் தொடங்கியுள்ள சூழலில், தடுப்பூசி செலுத்திக்கொள்வது முக்கியம். நவம்பர் 14ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 8-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
வக்காளர் பெயர் பட்டியலில் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு வழங்கும் சான்றிதழில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. விரைவில் சரி செய்யப்படும். தவறு ஏதேனும் நடைபெற்றிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.