சென்னை: 'சிதம்பரம் குழந்தை திருமணம் விவகாரம் ஒரு குழந்தையின் எதிர்கால விஷயம் தொடர்ந்து பேசினால் நன்றாக இருக்காது என்றும் எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி 169 வார்டில் அமைச்சர் சுப்பிரமணியன் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 'அண்ணா சாலை' பூங்காவிற்கு இன்று (ஜூன் 6) அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து, எல்சிஜி சாலையில் 14.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பல்நோக்கு கட்டடம் மற்றும் நியாய விலை அங்காடியையும் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சென்னை சைதாப்பேட்டை அண்ணா சலையில் மெட்ரோ பணி நடக்கும் நிலையில், காலியிடங்களில் மாநகராட்சி சார்பில் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா தொடங்குவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார். அதேபோல, 169 வது எல்.சி.ஜி வார்டில் நியாயவிலை கடை அமைக்க வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கையாக இருந்த நிலையில், சாலையில் 14.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடையும், வேளச்சேரி - சின்னமலை இணைப்பு சாலையில் 16 லட்சம் ரூபாய் மதிப்பில் மேலும் ஒரு புதிய ரேஷன் கடையும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது:சிதம்பரம் குழந்தை திருமணம் தொடர்பான வீடியோ வெளியான விவகாரம் (Chidambaram Child MarriageIssue) குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இது ஒரு குழந்தையின் எதிர்கால விஷயம் என்றும், தொடர்ந்து அது குறித்து பேசினால், நன்றாக இருக்காது என்றும் தெரிவித்தார். இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் தெரியாமல் பேசி வருவதாக குற்றம்சாட்டிய அவர், இது குறித்து விமர்சனம் செய்யாமல் இத்தோடு அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சிதம்பரம் சிறுமிகளுக்கு இருவிரல் கன்னித்தன்மை சோதனை? - ஆளுநர் புகாருக்கு டிஜிபி விளக்கம்!