தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டான்லி, தருமபுரி மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - minister ev velu

சென்னை ஸ்டான்லி, தருமபுரி மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடையில்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

minister ma Subramanian
மா.சுப்பிரமணியன்

By

Published : Jun 8, 2023, 3:00 PM IST

ஸ்டான்லி, தருமபுரி மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி

சென்னை:கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வரும் ஜூன் 15 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக சென்னை சைதாப்பேட்டை அப்பாவு நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அப்போது, சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "ஒன்றிய அரசால் கடந்த மாதம் மருத்துவ இடங்களுக்கு பொதுக்கலந்தாய்வு நடத்துவது என ஒரு வரைவு அனுப்பப்பட்டது. உடனடியாக இது தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி அவரின் அறிவுறுத்தலின் பேரில் துறையின் செயலாளர் மூலம் ஆட்சேபனை தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மருத்துவமனை மருத்துவம் தொடர்பான கொள்கைகளில் அதன் மீது சட்டம் இயற்றுவது என்பது மாநிலத்தின் உரிமை சார்ந்தது. மேலும் அது மாநில அரசின் திறனை தடுக்கும் பின் தங்கிய மக்களுக்கு ஆதரவை பொருளாதார அளவில் வழங்குவதற்கு தடையாக இருக்கும். எனவே மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு பொது கவுன்சில் இல்லை, மாநில அரசுகளை நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தமிழ்நாடு அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. மருத்துவம் தொடர்பான விஷயத்தில் மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதற்காக முயற்சி எடுத்துள்ள முதலமைச்சரின் நடவடிக்கைக்கும், முதலமைச்சருக்கும் மருத்துவ மாணவர்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளனர்.

மேலும் தேசிய மருத்துவ ஆணையம் தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளை ஆய்வு செய்து அதில் சிசிடிவி கேமரா பயோமெட்ரிக் என்கின்ற வகையில் சிறிய குறைபாடுகள் இருப்பதாக சொல்லி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி, தருமபுரி ஆகிய மருத்துவ கல்லூரிகளுக்கு தாக்கீது அனுப்பியிருந்தது. மேலும் அங்கீகாரம் ஏன் ரத்துச் செய்யக்கூடாது என அறிக்கை அனுப்பி இருந்தார்.

பின்னர் உடனடியாக மருத்துவத்துறையினரிடம் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி மருத்துவத்துறை குழுவை டெல்லிக்கு அனுப்பி வைத்து தேசிய மருத்துவ ஆணையம் குழுவிடம் விளக்கம் தரப்பட்டது. சிசிடிவி கேமரா மற்றும் பயோ மெட்ரிக் குறைபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளது எனவும், இதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் விடுமுறையில் செல்வது போன்றவையால் இவ்வாறு நடக்கும் என்றனர்.

அதைத் தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் உள்ள குறைகள் குறித்து அதன் முதல்வர் பாலாஜி நேரடியாக கடிதம் அந்தார். அதன் அதன் அடிப்படையில் நேரில் ஆய்வு செய்து, தேசிய மருத்துவ ஆணையம் ஸ்டான்லி மருத்துவ கல்லூரிக்கும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கும் அவர்கள் அளித்த அறிக்கையை திரும்ப பெற்றுள்ளனர். மேலும் 5 ஆண்டுகள் மருத்துவகல்லூரி இயங்குவதற்கு தடை இல்லை எனவும் அறிக்கை அனுப்பியுள்ளது.

மேலும் திருச்சி மருத்துவக் கல்லூரியில் நாளை காணொளி வாயிலாக ஆய்வு நடத்தப்பட உள்ளது. அது முடிந்தவுடன் அதற்கும் தீர்வு கிடைத்துவிடும். தருமபுரி மருத்துவ கல்லூரியும், ஸ்டான்லி மருத்துவ கல்லூரியும் இயங்குவதற்கு தடை இல்லை என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளாக ஆர்.சி.எச் என்ற அடிப்படையில் மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு பணி செய்து வருகின்றனர். குழந்தைகள் நல பணியாளர்கள் என்கின்ற பெயரோடு ஆங்காங்கே தேவைக்கு ஏற்ப பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆர்சிஎச் முறை என்ற அடிப்படையில் 1500 ரூபாய் சம்பளத்திற்கு 2000 வரை பணி நியமனம் செய்துகொண்டனர்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் அந்த பணியாளர்கள் மூலம் தொடர்ச்சியாக கோரிக்கை மனுக்கள் எங்களுக்கு அளித்து வந்தனர். 1500 ரூபாய் சம்பளம் என்பது போதுமான ஊதியம் இல்லை என்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். முதலமைச்சர் அவர்களுக்கு கூடுதலான சம்பளத்துடன் கூடிய பணியை வழங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இந்த துறையில் 878 மருத்துவ பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. 878 பணியிடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு ஆர்சிஎச் அடிப்படையான இந்த பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். இப்படி அவர்கள் பணியில் அமர்த்தப்படும் போது இனிமேல் அவர்களுக்கு மாதத்திற்கு 15000 ரூபாய் சம்பளம் கிடைக்கும்.

மேலும், 10 மடங்கு சம்பள உயர்வு என்பது முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2000 பேருக்கு மேல் ஆர் சி ஹச் பணியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் தற்போது 878 பேர்தான் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப இருக்கிறோம். மீதி இருக்கிறவர்கள் ஏற்கனவே இருக்கிற பணிகளில் தொடர்வார்கள்.

இனிவரும் காலங்களில் காலி பணியிடங்கள் இருந்தால் அவர்களும் நிரப்பப்படுவார்கள். 15 ஆம் தேதி குடியரசு தலைவர் வருவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார். மேலும் வரும் 15 ஆம் தேதி திறப்பதற்கு கூடிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "இலவச வீட்டு மனை பட்டாவிற்கு நிலம் அளக்கவில்லை"- மாஜி எம்எல்ஏ பரபரப்பு புகார்!

ABOUT THE AUTHOR

...view details