தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘தமிழ்நாட்டில் 87 விழுக்காட்டினருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு’ - கட்டாயம் தடுப்பூசி

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நான்காம்கட்ட குருதிசார் ஆய்வு முடிவுகளின்படி 87 விழுக்காட்டினருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Immunity increased  minister m subramanian said Immunity increased  minister m subramanian  minister m subramanian press meet  subramanian talks about vaccination  மா சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு  தமிழ்நாட்டில் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது  87 விழுகாட்டினருக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு  எதிப்பு சக்தி அதிகரிப்பு குறித்து மா சுப்பிரமணியன்  கட்டாயம் தடுப்பூசி  கரோனா தடுப்பூசி
மா சுப்பிரமணியன்

By

Published : Feb 9, 2022, 1:58 PM IST

சென்னை:கிண்டி கிங்ஸ் கரோனா அரசு மருத்துவமனையில் மா. சுப்பிரமணியன் ஆய்வுமேற்கொண்டார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய மா. சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நான்கு விழுக்காட்டினர். ஆக்சிஜன் சிகிச்சையில் இருப்பவர்கள் ஏழு விழுக்காட்டினர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இதுவரை ஏழு விழுக்காட்டினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் டெல்டா, ஒமைக்ரானால் 350 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி கட்டாயம்

தமிழ்நாட்டில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 70 விழுக்காட்டினர். தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும். ஆகையால் உடனடியாக இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 12) அன்று 22ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. நாளை (பிப்ரவரி 10) பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறும். 7.59 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மீதமுள்ள 1.5 லட்சம் பேர் நாளை நடைபெறும் முகாமைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

அதேபோல் இளம் சிறார்களுக்கு 80.4 விழுக்காட்டினருக்கு, முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 9.71 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழ்நாட்டில் 10 கோடி பேருக்குத் தடுப்பூசி என்ற இலக்கை அடைவோம்.

நோய் எதிர்ப்புச் சக்தி

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குருதிசார் ஆய்வு முடிவுகள் நேற்று (பிப்ரவரி 8) வெளியிடப்பட்டன. அதில், முதல் ஆய்வில் 32 விழுக்காட்டினருக்கும், இரண்டாவது ஆய்வில் 29 விழுக்காட்டினருக்கும், மூன்றாவது ஆய்வில் 70 விழுக்காட்டினருக்கும், நான்காம்கட்ட ஆய்வில் 87 விழுக்காட்டினருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி 90 விழுக்காடாக உள்ளது என இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி 69 விழுக்காடு உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகபட்சமாக திருவாரூரில் 93 விழுக்காடும், தென்காசியில் 92 விழுக்காடும் உள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவது குறைவாக உள்ளதே காரணம். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

நீட் விவகாரம்

தமிழ்நாடு அரசின் நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மாநிலத் தலைவர் அண்ணாமலை, நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு அவசியமில்லை எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கல்வித்திறன் அதிகம் உள்ளது, அதனால் நீட் தேர்வை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பார்கள். நீட் தேர்விற்கு பாஜக போட்ட முடிச்சை அவர்களே அவிழ்ப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை - சுயேச்சை எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details