4 மாவட்டங்களில் தொடரும் கனமழை: மீட்பு, நிவாரணப் பணி குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வெளியிட்ட செய்தி குறிப்பு..! - heavy rain in thirunelveli
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தென் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதனால், போர்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணி குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளார்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணி குறித்து அமைச்சர் வெளியிட்ட செய்திகுறிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்துவருவதனால், போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து நேற்றைய நிலவரப்படி (டிச.17)காலை முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு மணி நேரத்தில், பல பகுதிகளில் அதி கனமழை பதிவாகியுள்ளது.
கனமழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு பேரிடர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்பணி குழுக்கள் என மொத்தம் 425 வீரர்கள் கொண்ட 17 குழுக்கள் பாதிப்படைந்துள்ள 4 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் மீட்பு நடவடிக்கைகளுக்காக வர உள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளது.
இதுமட்டுமின்றி, இந்திய இராணுவம் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் (Common Alert Protocol) மூலம் 62.72 இலட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுதுடன், வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிதகளில் இருக்கக்கூடிய பொதுமக்கள் முன்கூட்டியே நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வ.எண்
மாவட்டம்
தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை
தேசிய பேரிடர் மீட்புப்படை
மொத்தம்
1
திருநெல்வேலி
6 குழு(150 வீரர்கள்)
4 குழு (100 வீரர்கள்)
10 குழு (250 வீரர்கள்)
2
கன்னியாகுமரி
குழு அனுப்பப்படவில்லை
குழு அனுப்பப்படவில்லை
குழு அனுப்பப்படவில்லை
3
தூத்துக்குடி
3 குழு (75வீரர்கள்)
4 குழு(100வீரர்கள்)
7 குழு (175 வீரர்கள்)
4
தென்காசி
குழு அனுப்பப்படவில்லை
குழு அனுப்பப்படவில்லை
குழு அனுப்பப்படவில்லை
மொத்தம்
9 குழுக்கள் (225 வீரர்கள்)
8 குழுக்கள் (200 வீரர்கள்)
17 குழுக்கள் (425 வீரர்கள்)
நிவாரண முகாம்கள் - (டிச. 17) காலை 8 மணி வரையிலான நிலவரம்:
வ.எண்
மாவட்டம்
முகாம் எண்ணிக்கை
மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
1
திருநெல்வேலி
41
2,723
2
கன்னியாகுமரி
9
517
3
தூத்துக்குடி
26
4,056
4
தென்காசி
8
138
4 மாவட்டங்களிலும் மொத்தமாக 84 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இதுவரையில் 7ஆயிரத்து 434 பேர் மீட்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.