மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சருடனான காணொலி மாநாட்டுக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, ”கரோனா தொற்று பரவுவதைக் குறைக்க சென்னை, உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 19.06.2020 முதல் 30.06.2020 வரை முழு ஊரடங்கை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். மக்களின் துன்பங்களைப் போக்க, அனைத்து அரிசி அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் 1000 ரூபாய் விநியோகிப்பதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு, ஏற்கனவே 2019 செப்டம்பர் 20ஆம் தேதி ’ஒன் நேஷன் ஒன் கார்டு’ திட்டத்தை செயல்படுத்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.