தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வேலையில்லாவிட்டால் ஆசிரியர்கள் வெளியேற்றப்படுவார்கள்...!' - Education Minister Anbalagan

சென்னை: ஆசிரியர்களுக்கு வேலை இல்லாவிட்டால் வெளியேற்றப்படுவார்கள் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

minister

By

Published : Aug 6, 2019, 4:24 PM IST

Updated : Aug 6, 2019, 5:00 PM IST

உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், பி. ஆர்க் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இடங்களை தேர்வு செய்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் பாதுகாப்புப் படையினரின் வாரிசுகளுக்கு ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. அன்பழகன், "பி. ஆர்க் பொறியியல் படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டில் ஆயிரத்து 700 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 110 இடங்களும் என ஆயிரத்து 810 இடங்கள் 51 நிரப்பப்பட உள்ளன. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 90 இடங்களும், முன்னாள் பாதுகாப்புப் படையினரின் வாரிசுகளுக்கு 20 இடங்களும், விளையாட்டு வீரர்களுக்கு 44 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கலந்தாய்வு வருகின்ற ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் ஆசிரியர்-மாணவர் விகிதம் இந்தாண்டு ஒரு ஆசிரியருக்கு 20 மாணவர்கள் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் உபரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. அரசு பொறியியல் கல்லூரிகளில் 31 ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. அதற்காகவே, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆசிரியர்களைப் பணியிட மாற்றம் செய்து வருகிறோம்.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஒரு ஆசிரியருக்கு 20 மாணவர்கள் என்ற விகிதத்தில் இருந்தால் எந்தவித பிரச்னையும் இல்லை. அப்படி இல்லாமல் ஆசிரியர்கள் உபரியாக இருந்தால் அவர்களை வேறு பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆசிரியர்களுக்கு வேலையில்லை என்றால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

பொறியியல் படிப்பில்29 ஆயிரத்து 92நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், அரசு ஒதுக்கீட்டுக்காக அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் அரசு மாணவர்களை நிரப்பித் தருகிறது. அதன் பின்னரும் கல்லூரியில் மாணவர்கள் சேரவில்லை என்றால் சுயநிதி கல்லூரிகளை நடத்துவது குறித்து அதன் நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும். அரசு எதுவும் செய்ய முடியாது" எனத் தெரிவித்தார்.

Last Updated : Aug 6, 2019, 5:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details