தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அமைச்சர் ஜெயக்குமார் - ராயபுரம் தொகுதி

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ராயபுரம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும் யார் வெற்றி பெறுவர் என்று பார்ப்போம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.

jayakumar
jayakumar

By

Published : Jan 23, 2021, 7:12 PM IST

Updated : Jan 24, 2021, 4:52 PM IST

சென்னை ராயபுரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர்கள் அமைச்சரிடம் ராயபுரம் தொகுதிக்கு ஜெயக்குமார் எந்த அடிப்படை வசதி செய்து தரவில்லை என்ற ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு குறித்து கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ”நான் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதால்தான் என்னை ராயபுரம் தொகுதியில் தொடர்ந்து 5 முறை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். திமுக கட்சியின் சொத்துக்கள்கூட திமுக குடும்பத்திற்குதான் போய் சேர்கிறது ஒரு குடும்ப ஆதிக்க அரசியல் செய்கின்றனர்.

ராயபுரம் தொகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என திமுகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர். நான் சவால் விடுகிறேன் ஏன் திமுக தலைவர் ஸ்டாலின் என்னை எதிர்த்து ராயபுரத்தில் போட்டியிடக்கூடாது. யார் வெற்றி பெறுவார் என்று மக்கள் முடிவு செய்யட்டும். ஆறாவது முறையாக ராயபுரம் தொகுதி மக்கள் என்னைதான் தேர்வு செய்வார்கள்.

ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அமைச்சர் ஜெயக்குமார்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ராயபுரம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும். என்னை எதிர்த்து போட்டியிட்டால் தோல்வி அடைந்து விடுவார் என்று அவருக்கு தெரியும். ராயபுரத்தில் மீண்டும் அதிமுகதான் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.

Last Updated : Jan 24, 2021, 4:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details