கோவாவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார், இன்று சென்னை திரும்பினார். அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜிஎஸ்டி கவுன்சில் 37ஆவது கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி மூலம் ரூ. 4,500 கோடி வர வேண்டி உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.17 விழுக்காடு அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது.
'ஆளும் கட்சியை தொட்டால்தான் ஆளாக முடியும்...!' - ஜெயக்குமார் பொளேர்
சென்னை: ஆளும் தரப்பை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள். ஆனால் அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது வரலாறு என அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
திமுகதான் மிகப்பெரிய ஊழல் கட்சி. ஊழல் செய்ததற்காக ஆட்சியே கலைக்கப்பட்ட கட்சி திமுகதான். இடைத்தேர்தலை அதிமுக எதிர்கொண்டு நிச்சயம் வெற்றிபெறும். வேலூர் மக்களவை இடைத்தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் என்ற அளவில்தான் திமுக வெற்றிபெற்றுள்ளது” என்றார்.
மேலும், தனது படத்திற்கு விளம்பரம் தேடவே ஆளும் தரப்பை விஜய் சீண்டுகிறாரா? என்ற கேள்விக்கு, ‘ஆளும் தரப்பை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள். ஆனால் அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது வரலாறு. படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.