தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘நாங்கள் பாண்டவர்கள்... திமுக சகுனி’ - ஜெயக்குமார் பஞ்ச்!

சென்னை: அதிமுகவினர் பாண்டவர்கள் என்றும், திமுக தான் சகுனி என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar

By

Published : May 3, 2019, 9:33 PM IST

தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, உலக பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் தான் நிறைய ஊடகங்கள் இருக்கின்றன. இதுவே சுதந்திரம் தான். இன்னும் பல புதிய ஊடகங்கள் வர வேண்டும். கத்தியினைக் காட்டிலும் பேனா வலிமையானது.

ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

வேலூரில் கைப்பற்றப்பட்ட பணம் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமானதுதான். அதிமுகவினர் பாண்டவர்கள், திமுகவினர்தான் சகுனிகள். மே 23ஆம் தேதிக்கு பிறகு அமமுக - திமுக போட்டு வைத்திருக்கும் கணக்குகள் எதுவும் பலிக்காது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details