இதுகுறித்து செய்தியாளர்களிடம் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,
"மாநில நிதிநிலை அறிக்கை மீனவர் நலனுக்கானதாக இருக்கும். மத்திய பட்ஜெட்டில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் என்பது வரவேற்கத்தக்கது. தேர்தல் அறிக்கையில் இது சொல்லப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கக்கூடிய நன்நாள்.
வங்கிக்கடன் பெற்ற மீனவர்கள் முறையாக திரும்பி செலுத்தினால் 3% என்பதும் வரவேற்கத்தக்கது. நல்ல விஷயங்களாக, ஊரக வேலை வாய்ப்புகளுக்கு 60 கோடி ஒதுக்கீடு, ஓய்வூதிய திட்டம் நன்றாக உள்ளது. 2028-க்குள் இந்தியா முழுமையாக வீடுகள், அடிப்படை வசதிகள் என்பதும் வரவேற்கத்தக்கது.
பொருளாதார இட ஒதுக்கீடு என்பதும் சரியானதே. ஏழை விவசாயிகளுக்கு உதவும் நான்காயிரம் என்பதும், ஆறாயிரம் என்பதும் சரியான அறிவிப்பு. ஆய்வு செய்யும் அதிகாரம் படைத்தவர்கள் மக்கள்தான். நிதி நெருக்கடி இருந்தாலும், மாநில அரசு முடிந்தவரை செயல்படும், ஆனால் மத்திய அரசுக்கு எதுவும் சாத்தியமே. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என்னும் வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் ஸ்டாலின்தான் என்று குற்றஞ்சாட்டினார்.
கடந்த 1976-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதியை யாரும் மறக்க முடியாது. இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் மக்களுக்கு எதையும் செய்யவில்லை திமுக. மாறன், அவரது மகன் உள்ளிட்டோர் மத்தியில் அங்கம் வகித்தும் மக்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்க முயற்சி எடுக்கவில்லை. ஆனால், இந்த ஆட்சியில் வேலை கொடுக்க முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மக்களுக்கு ஏற்ற, பயன்படும், ஏற்கும் நல்ல நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு வழங்க உள்ளது. மாணவர்கள் நலன், பொதுமக்கள் நலன் கருதி பணிக்கு திரும்பிய அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி" என்று கூறினார்.