காவேரி விவகாரம்: ஒழுங்காற்று குழு கர்நாடகத்திற்கு ஆரவாக உள்ளதா? - அமைச்சர் துரைமுருகன் கேள்வி! சென்னை:டெல்லி சென்று திரும்பிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காவிரியில் தண்ணீர் இருக்கா? இல்லையா? என்பதை ஆராய்ந்து சொல்லும் உரிமை காவிரி ஒழுங்காற்று குழுவிற்கே அதிகாரம் உள்ளது.
கடந்த 13 ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தின் நபர்கள் ஆய்வு செய்து விட்டு 12 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரலாம் என்று கூறினார்கள். அதற்கு பிறகு 5 ஆயிரம் கொடுக்கலாம் என்று கூறுகிறார்கள். நான் என்ன கேட்கிறேன் என்றால், காவேரி ஒழுங்காற்று குழு இரண்டு பேருக்கும் சமமாக செயல்படுகிறதா? இல்லை கர்நாடகத்தில் ஆதரவுக்காக செயல்படுகிறதா? என மத்திய அரசிடம் கேட்டுள்ளேன்.
இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கவில்லை என்றால், மத்திய அரசு எதற்கு? காவேரி ஒழுங்காற்று குழு எதற்கு? என அவரிடமே கேட்டேன். மேலும் கடந்த 13 ஆம் தேதி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன் பிறகு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதில் ஒருவர் கர்நாடகத்திற்கு குடிக்க தண்ணீர் தேவைப்படுகிறது என்று கூறினார்கள். ஏன் தமிழக மக்களும் தான் அதை குடிக்கிறார்கள்.
அப்படி என்றால் நீங்கள் வாரிக் கட்டிக் கொண்டு போவதா என்று கேட்டேன். மேலும் காவேரி விவகாரத்தில் ஒருதலைபட்சமாகவும், கர்நாடகாவிற்கு ஆதரவாகவும் ஒழுங்காற்றுக் குழுவினர் செயல்படுகிறார்கள். அதனால் தான் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம். நமது வழக்கறிஞரிடம் சந்தித்துக் கூறியுள்ளேன். உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவதாக தெரிவித்துள்ளார்.
இதுவரையில் கர்நாடகாவில் தமிழகத்தினுடைய கோரிக்கையை எந்த காலத்திலும் ஏற்றுக் கொண்டதில்லை, எல்லா விஷயங்களுக்கும் முடியாது என்று தான் கூறியுள்ளார்கள். ஒவ்வொன்றிற்கும் நாம் போராடி தான் பெற்றுக் கொண்டிருக்கிறோம். தற்போது காவிரியின் நீண்ட வரலாற்றில் ஆரம்பம் முதல் நான் இருக்கிறேன்.
எதையும் ஒரு நாள் கூட ஒரு துரும்பு கூட நாம் கேட்டதற்கு அவர்கள் அசைந்து கொடுத்ததில்லை. நாம் பெற்றிருக்கும் உரிமை அனைத்தும் உச்ச நீதிமன்றம் கொடுத்த உரிமை தான். அதுபோல இதையும் நாம் பெற்றுவிடுவோம்" என்று அமைச்சார் துரைமுருகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான்கு ஆலைகளின் மின் இணைப்பு கட்; மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பின்னணி என்ன?