தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை பின்னடைவு? - மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்படுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Minister Duraikannu physical condition continues to deteriorate
Minister Duraikannu physical condition continues to deteriorate

By

Published : Oct 26, 2020, 1:34 PM IST

வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 13ஆம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு, எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவித்தது.

இதையடுத்து, நேற்று (அக் 25) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டு நலம் விசாரித்தார்.

அமைச்சரின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக வெளியான தகவலையடுத்து, தற்போது அமைச்சர்கள் பலரும் மருத்துவமனைக்கு வருகை தருகின்றனர்.

அமைச்சரின் உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வரும்நிலையில், இன்று மாலை மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details