தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடைத்தேர்தலில் அதிமுகவே வெற்றிபெறும் - திண்டுக்கல் சீனிவாசன் - நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக உண்மையான வெற்றியை பெறும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

dindigul srinivasan

By

Published : Sep 24, 2019, 11:38 PM IST

Updated : Sep 25, 2019, 7:13 AM IST

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் வனத் துறை அலுவலர்கள் மற்றும் வன பாதுகாப்பு இயக்குநர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்நாடு அரசின் சரியான நடவடிக்கையால் வனம் மற்றும் உயிரியல் துறை சிறந்து விளங்குகிறது.

தாங்கள் அமெரிக்கா சென்று வன மற்றும் உயிரியல் துறை சம்பந்த பிரிவுகளை உயர்த்துவதற்கான பல முயற்சிகளை செய்துவந்துள்ளோம் என்றும் அதனை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.

மேலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுகதான் வெற்றிபெறும். அந்த வெற்றி உண்மையான வெற்றியாக இருக்கும் என்றார்.

Last Updated : Sep 25, 2019, 7:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details