தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொன்ன அமைச்சர்! - education minister demand

சென்னை: தங்கள் மீது போடப்பட்டுள்ள 17பி ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விநோத நிபந்தனை விதித்துள்ளதாக ஜாக்டோ ஜியோவைச் சேர்ந்த அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுக மக்களாவை உறுப்பினர்களை ராஜினாமா செய்ய சொன்ன அமைச்சர்

By

Published : Jun 13, 2019, 9:00 AM IST

ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றது. அப்பொழுது அரசு அவர்களைப் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், அவர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தது.

ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது அரசு ஒழுங்கு நடத்தை விதி 17பி இன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில், அவர்கள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை சந்தித்தனர். அப்போது அவர் விநோதமான நிபந்தனை விதித்ததாக அவர்கள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக மக்களவை உறுப்பினர்களை ராஜினாமா செய்ய சொன்ன அமைச்சர்

இது குறித்து, அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் பொதுச் செயலாளர் அண்ணாமலை கூறுகையில்,

"ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு 17பி பிரிவில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனை ரத்து செய்யக்கோரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை சந்தித்தோம். அப்போது அவர் நாடாளுமன்றத் தேர்தலில் அஞ்சல் வாக்குகள் 80 விழுக்காடு திமுகவிற்கு அளித்தீர்கள். எனவே உங்களால் வெற்றிபெற்ற 37 பேரையும் ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்.

பின்னர், ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்போம் எனக் கூறினார். அமைச்சரின் இந்தப் பேச்சு எங்களுக்கு விநோதமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மீது போடப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து சுமுகமான சூழ்நிலை உருவாக அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கோரிக்கை விடுத்தார்.

ABOUT THE AUTHOR

...view details