சென்னை:நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடப்பு கல்வியாண்டிற்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பேரவையின் செயல்பாட்டை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர், பேசிய அவர், “லயோலா கல்லூரி என் நண்பன் உதயநிதி படித்த கல்லூரி. அவரின் நண்பனாக இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்.
இது எனக்கு பரிச்சயமான கல்லூரி தான். படிப்பைக் காட்டிலும் சமுதாயத்தில் அக்கறை காட்டுவது லயோலா கல்லூரி. நாட்டு மக்களுக்கு ஓர் பிரச்னை என்றால் முதலில் குரல் எழுப்புவது லயோலா கல்லூரி தான். நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் தான், போதையற்ற சமுதாயத்தை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு உள்ளது.