தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறைந்த முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவிக்கு சிறை உறுதி - உயர்நீதிமன்றம் தீர்ப்பு! - court news in tamil

accumulation of assets in excess of income case: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.எம்.பரமசிவனின் மனைவிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 1:05 PM IST

சென்னை: கடந்த 1991- 1996 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக 38 லட்சம் ரூபாய் அளவு சொத்துக்கள் சேர்த்ததாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்த ஏ.எம் பரமசிவன் மற்றும் அவரது மனைவி நல்லம்மாள் ஆகியோர் மீது 1997 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், முன்னாள் அமைச்சர் பரமசிவக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பரமசிவன் மற்றும் அவரது மனைவி நல்லம்மாள் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் 2000 ஆம் ஆண்டு மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்த போது, கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம், பரமசிவன் மரணம் அடைந்தார்.

இந்த நிலையில், அவர் மனைவி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இன்று (நவ.20) தீர்ப்பளித்தார்.மறைந்த அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளின் மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனையை அனுபவிக்கச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். அதன்படி மறைந்த முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு ஓராண்டு சிறை தண்டனை உறுதியானது.

இதையும் படிங்க:"திருமணமான மகன் உயிரிழந்தால் சொத்தில் பங்கு கேட்க தாய்க்கு உரிமையில்லை" - சென்னை உயர் நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details