தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வீட்டு வாடகை வசூலிக்கத் தடை விதிப்பது நடைமுறை சாத்தியமற்றது' - chennai high court

சென்னை: வாடகைக்கு குடியிருப்பவரிடம் உரிமையாளர் வாடகை வசூலிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு அறிவிக்காத நிலையில், வாடகையை வசூலிக்கத் தடை விதிப்பது நடைமுறை சாத்தியமற்றது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

MHC refuse to bar house owners collect house rent from tenant
MHC refuse to bar house owners collect house rent from tenant

By

Published : Aug 3, 2020, 7:24 PM IST

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'கரோனா தொற்று பரவலைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் அறிவித்துள்ள ஊரடங்கு சில தளர்வுகளுடன் தற்போது வரை தொடர்கிறது.

கரோனா ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு, வாடகை குடியிருப்புவாசிகளிடம் இருந்து நிலம் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு வாடகை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மார்ச் 29ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும், பேரிடர் மேலாண்மைச் சட்டம், அவசர கால, பெருந்தொற்று நோய்த் தடுப்பு அவசரகால சட்டத்தின் கீழ், வாடகை வசூல் செய்வதற்குத் தடை விதித்து அரசாணை வெளியிட்டது.

ஆனால், பெரும்பாலான வீட்டின் உரிமையாளர்கள் மாத வாடகையை வசூல் செய்துள்ளனர். வாடகை செலுத்தாதவர்கள் வீட்டின் உரிமையாளர்களால் தொந்தரவிற்கு உள்ளாக்கப்பட்டு வீட்டை காலி செய்துள்ளனர்.

பெருந்தொற்று காலத்தில், இதுபோன்ற நடவடிக்கைகள் நோய் தொற்றுப் பரவலுக்கு வழிவகுக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசும் ஒரு மாதம் வாடகை வசூல் செய்யக்கூடாது என அரசாணை வெளியிட்டது. ஆகவே, பெருந்தொற்று முடிவுக்கு வராத இந்தக் காலகட்டத்தில் வாடகை வசூல் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்க நடைமுறையில் சாத்தியக்கூறுகள் இல்லை. இதே போல தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகத் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, நீதிமன்றத்தில் வாடகைதாரர்கள், வீட்டு உரிமையாளர்கள் என யாரும் வழக்குத் தொடரவில்லை. அதனால், இது பொதுநல வழக்கு ஆகாது என்றும் தெரிவித்தனர்.

மேலும், அரசினுடைய அறிவிப்பில் தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கை நாளை ஒத்திவைக்க வேண்டும் என மனுதாரர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, வழக்கு நாளைக்கு (ஆகஸ்ட் 4) ஒத்திவைக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details