தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசுக்கு ஆர்வமில்லையா? நீதிமன்றம் கேள்வி - whether the Govt is not interested

தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தாத தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீமைக் கருவேல மரங்கள் அகற்றுவதில் அரசுக்கு ஆர்வம் இருக்கிறதா?” நீதிபதிகள் கண்டனம்
சீமைக் கருவேல மரங்கள் அகற்றுவதில் அரசுக்கு ஆர்வம் இருக்கிறதா?” நீதிபதிகள் கண்டனம்

By

Published : Jun 17, 2023, 7:18 PM IST

Updated : Jun 17, 2023, 7:30 PM IST

சென்னை:தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்தனர். அந்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (ஜூன் 17) விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 'தென்காசி மாவட்டத்தில் ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலும், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 500 ஹெக்டேர் பரப்பளவிலும் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

“சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டால் தான், அவற்றை மீண்டும் வளராமல் தடுக்க முடியும். விருப்பம் உள்ள தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த பகுதியில் மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளது, அகற்றுவதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது சம்பந்தமாக குழுக்கள் அமைக்க பிறப்பித்த உத்தரவுகளை ஏன் அரசு அமல்படுத்தவில்லை? என அதிருப்தி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: விளையாட்டு நிகழ்வுகளில் மது: சட்டவிரோதம் இல்லை என தமிழ்நாடு அரசு பதில் மனு

மேலும் “சுற்றுச்சூழலை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, அரசு கொள்கை முடிவு எடுத்தபோதும், அது சம்பந்தமாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை என்பதால் உண்மையில் சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதில் (Removal of Juliflora Trees) அரசுக்கு ஆர்வம் இருக்கிறதா?” என நீதிபதிகள் சந்தேகம் எழுப்பினர்.

அப்போது குறுக்கிட்ட அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், “கருவேல மரங்கள் அதிகமுள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அதை அகற்றுவதற்கு டெண்டரும் விடப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி உரிய குழுக்கள் விரைவில் அமைக்கப்படும்” என உத்தரவாதம் அளித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதற்கான குழுக்கள் அமைப்பது குறித்து ஜூலை 5ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இல்லையெனில், தகுந்த நடவடிக்கையை நீதிமன்றம் தன்னிச்சையாக எடுப்பதை தவிர வேறு வழியில்லை” எனவும் எச்சரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பரபரப்பு - பல கோடி ரூபாய் மதிப்புள்ள உதிரி பாகங்கள் திருட்டு!

Last Updated : Jun 17, 2023, 7:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details