தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதயநிதியை பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு: ஆதாரங்களை தாக்கல் செய்ய இந்து முன்னணிக்கு நீதிமன்றம் உத்தரவு!! - Latest news in Tamil

Madras High Court: திமுக அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி மற்றும் எம்.பி. ஆ.ராசா ஆகியோரின் சனாதன பேச்சுகள் குறித்த ஆதாரங்கள் தாக்க செய்ய இந்து முன்னணி நிர்வாகிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc-order-to-file-hindu-munnani-evidence-in-case-against-ministers-udayanidhi-shekharbabu-and-mp-raja
உதயநிதியை பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு; இந்து முன்னணி ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 6:12 PM IST

சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில், சனாதனம் என்பது டெங்கு, மலேரியா போன்றது என்றும், அதை ஒழிக்க வேண்டுமென்றும் அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் P.K.சேகர்பாபுவும் பங்கேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசி வருகிறார்.

இந்த நிலையில், இவர்கள் மூவரும் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள்? என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட வேண்டும் என இந்து முன்னணியைச் சேர்ந்த நிர்வாகிகள் உயர் நீதிமன்றத்தில் கோ வாரண்டோ மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க:“பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடப்பதை ஏற்க முடியாது” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!

இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கிஷோர் குமார் என்பவர், சேகர்பாபுவிற்கு எதிராகவும், மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் என்பவர் ஆ.ராசாவிற்கு எதிராகவும், மாநிலச் செயலாளர் T. மனோகர் என்பவர் உதயநிதிக்கு எதிராகவும் கோ வாரண்டோ மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, உதயநிதி மற்றும் ஆ.ராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் P.வில்சன், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், அவர்களின் நியமனம் எந்த சட்டத்திற்கும் புறம்பானது அல்ல என்றும், அவர்கள் எந்த விதிமுறை மீறல்களிலும் ஈடுபடவில்லை என்றும், அவர்களின் பேச்சு விவரங்கள் மனுவில் தெரிவிக்கப்படவில்லை என்றும், அரசியல் காரணத்துக்காக நீதிமன்றத்தைப் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது எஎத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவிட்டதாக வழக்கு; கோவை பாஜக தலைவரின் முன்ஜாமீன் மனு தள்ளிவைப்பு!

சேகர்பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் N.ஜோதி, குற்றச்சாட்டு கூறப்படும் பேச்சு அல்லது வீடியோ குறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமே? தவிரத் தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மூவரின் பேச்சு குறித்த ஆதாரங்களைத் தாக்கல் செய்ய இந்து முன்னணியைச் சேர்ந்த மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 11ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:“சட்ட விரோதமாக விளம்பரப் பலகைகள் வைப்பதை தடுப்பது முக்கியமானது” - சென்னை உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details