தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டக்கல்லூரி கலவரத்தில் பொய் வழக்கு; வழக்கறிஞருக்கு நிவாரணம் பெற உரிமை - உயர்நீதிமன்றம் அதிரடி! - வழக்கறிஞருக்கு நிவாரணம் பெற உரிமை

சட்டக்கல்லூரி மாணவர்கள் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கில் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் சரவணன் உரிய நிவாரணத்தை பெற உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

chennai
சட்டக்கல்லூரி கலவரத்தில் பொய் வழக்கு

By

Published : May 31, 2023, 10:14 AM IST

சென்னை:வழக்கறிஞர் சரவணன் கருப்புசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "அகில இந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட இயக்கத்தை நடத்தி வருகிறேன். கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு எதிராக பல புகார்களை செய்தேன்.

இதனால், சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டு அருண், ஐபிஎஸ் துணை காவல்துறை கண்காணிப்பாளர் சாம்பசிவம் உள்பட பல காவல்துறை அதிகாரிகள் என் மீது பொய் வழக்கு பதிவு செய்து, அடித்து துன்புறுத்தினர். எனவே, என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும், என்னை துன்புறுத்திய காவல்துறை அதிகாரிகள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், "மனுதாரர் சரவணன் தன்னை துன்புறுத்திய காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக கொடுத்த புகாரை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், சரவணனுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு அளித்தது.

இதையும் படிங்க:"கல்வி பண்பு மட்டுமல்ல சமூக சார்ந்த உணர்வு" தமிழக அரசின் உயர்கல்வி குழுவில் இருந்து விலகியது ஏன்? - பேராசிரியர் ஜவஹர் நேசன் சிறப்பு நேர்காணல்!

அதன்படி பாதிக்கப்பட்ட சரவணனுக்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கி கடந்த ஆண்டு நவம்பர் 17-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மனுதாரருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர் என்று கூறப்பட்டது.

மேலும், காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தான் ஒரு அப்பாவி என்பதை நிரூபித்துள்ளதாகவும் மனுதாரர் கூறுகிறார். எனவே, பொய் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடி மனுதாரர் நிவாரணம் பெறலாம்" எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: டெல்லியில் மல்யுத்த வீரர்களுக்கு நடந்தது கண்டிக்கத்தக்கது - ப.சிதம்பரம் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details