சென்னை:தமிழகத்தில் தனியார் வாகனங்களில், அரசு வாகனங்களில் குறிப்பிடப்படும் 'G' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும், 'இந்திய அரசு', 'தமிழ்நாடு அரசு', 'உயர் நீதிமன்றம்', 'காவல் துறை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கிருத்திகா என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், அரசு சின்னங்களை ஒட்டிக் கொண்டு சிலர் விதி மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி, தனியார் வாகனங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் R.முனியப்பராஜ் ஆஜராகி,
இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 2022ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.