தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.4,620 கோடி முதலீடு மோசடி வழக்கு; ஹிஜாவு நிதி நிறுவன இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி

4 ஆயிரத்து 620 கோடி ரூபாய் முதலீடு மோசடி வழக்கில் ஹிஜாவு நிதி நிறுவன இயக்குனர் கலைச்செல்வியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 16, 2023, 9:20 PM IST

சென்னை:சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஹிஜாவு நிதி நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு 15 சதவீதம் வட்டி தருவதாக கூறி, பொதுமக்களிடம் சுமார் 4,620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளது.

இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து, இதுவரை 14 பேரை கைது செய்துள்ளது. இந்த வழக்கில், அந்நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்கும் பொருட்டு அவர்களுக்கு எதிராக 'லுக்அவுட் நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இயக்குனர்களில் ஒருவரான கலைச்செல்வி, தனது கணவர் ரவிச்சந்திரன் பெயரில் ஆர்.எம்.கே. பிரதர்ஸ் என்கிற நிறுவனத்தை நடத்தி, ஹிஜாவு நிறுவனத்திற்காக முதலீடுகளை ஈர்த்ததாக கடந்த ஏப்ரல் முதல் வாரம் கைது செய்யப்பட்ட நிலையில், நிதி நிறுவன மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து ஜாமீன் கோரி கலைச்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று (ஆக.16) விசாரணைக்கு வந்ததது. அப்போது காவல்துறை தரப்பில், ஏறத்தாழ 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் 4 ஆயிரத்து 620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளதாகவும், 16 ஆயிரத்து 500 பேரிடமிருந்து இதுவரை புகார்கள் வந்துள்ளதாகவும், 40 பேர் மீது குற்றம்சாட்டபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் வெளிநாடு தப்பிச் செல்லவும், சாட்சிகள் மற்றும் ஆவணங்களை கலைக்கவும் வாய்ப்புள்ளதாகவும், மீட்கப்பட வேண்டிய தொகை அதிகம் என்பதால், ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார். இந்த வாதங்களை ஏற்ற நீதிபதி, இயக்குனர் கலைச்செல்வியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களில் உரிமை கோர முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!

ABOUT THE AUTHOR

...view details