தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஊக்குவிக்கும் ரயில்வே நிர்வாகம்?.. சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி! - Latest news in Tamil

Railway administrations promotion of plastic usage: தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தொடர்ந்த வழக்கில், பிளாஸ்டிக் பயன்பட்டை தடுப்பது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ரயில்வே நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc-disapproves-of-railway-administrations-promotion-of-plastic-usage
பிளாஸ்டிக் பயன்பாட்டை ரயில்வே நிர்வாகம் ஊக்குவிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 8:49 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தொடர்ந்த வழக்கில், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுப்பது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ரயில்வே நிர்வாகத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோரது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிளாஸ்டிக் பயன்பாட்டையும், உற்பத்தியையும் ஊக்குவிக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் செயல்படுவதாகவும் தற்போது புதிதாக அறிமுகப்படுத்திய வந்தே பாரத் ரயில் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Bank Holidays October 2023 : அக்டோபரில் 14 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோங்க..!

மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க முன்மாதிரியாக செயல்பட வேண்டிய ரயில் நிர்வாகம் அதனை கடைபிடிக்கவில்லை எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், பிளாஸ்டிக் பயன்பட்டைத் தடுப்பது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் விற்பனைச் செய்வது தொடர்பாக முதல் முறை பிடிபட்டால் அபராதமும், இரண்டாவது முறை பிடிபட்டால் கடைக்கு சீல் வைக்கப்பட்டு வணிக உரிமம் புதுப்பிக்கபட மாட்டாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து நீதிபதிகள், இந்த நடவடிக்கைகள் எதுவும் சென்னை கோயம்பேடு பகுதி வணிக நிறுவனங்களில் அமல்படுத்தியதாக தெரியவில்லை எனவும், இந்தியாவில் ஆண்டுக்கு 430 மில்லியன் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யபடுவதாகவும், அதில் மூன்றில் இரண்டு பங்கு பிளாஸ்டிக் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி குப்பையில் வீசுவதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த குப்பைகள் நீர் வழித்தடம் மற்றும் காற்றின் மூலமாக ஆறுகள் நீர்நிலைகள் சென்றடைகிறது. இதனால், கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தொடர் விடுமுறை; பலமடங்கு உயர்ந்த விமான பயணக் கட்டணம்!

முன்னோர்கள் காலத்தில் தண்ணீரை ஆறுகளில் பார்த்ததாகவும், தந்தை காலத்தில் கிணறுகளில் பார்த்ததாகவும், தற்போதைய காலத்தில் குழாய்களில் பார்ப்பதாகவும், மகன்கள் காலத்தில் பாட்டில்களில் பார்க்கப்படுவதாகவும், பேரக்குழந்தைகள் காலத்தில் சிறு குப்பிகளில் பார்க்கும் நிலையை தடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தார்.

நீரின்றி அமையாது உலகு என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் நீரின் தேவையை தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளனர். பிளாஸ்டிக் கழிவுகள் மூலமாக தண்ணீர் மாசு படுவதாகவும், பெரிய வர்த்தக நிறுவனங்கள், பிரபல நிறுவனங்கள், அனைத்தும் பிளாஸ்டிக் அதிக அளவில் பயன்படுத்துவதாகவும், தினமும் பயன்படுத்தக்கூடிய சோப்பு, போன்ற நிறுவனங்களும் பிளாஸ்டிக் அதிகளவில் வைத்திருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

பால், பழம், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும், தற்பொழுது பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து வருவதாகவும், இது மனித உயிருக்கு ஆபத்தாகவும் அடுத்த தலைமுறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இது போன்ற பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:திருச்செந்தூர் தீர்த்தக்கிணறு 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்!

தமிழக அரசு தரப்பில், பிளாஸ்டிக் தடை உத்தரவுகள் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தி வருவதாக தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவித்த நடவடிக்கைகள் எல்லாம் ஆமை வேகத்தில் தான் உள்ளதாகவும், சிறு கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிக அளவில் உள்ளதாகவும், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும்.

பழங்கள், காய்கறி விற்பனை கடைகள் ஆகியவற்றில் ஆய்வு நடத்த வேண்டும் எனவும், அங்கு பிளாஸ்டிக் பயன்பாட்டுகளை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர். பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்துவது தொடர்பான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:பத்தலப்பல்லி மலைப்பகுதியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details