சென்னை:பினாமி பரிவர்த்தனை தடைச்சட்டத்தின்கீழ், வருமான வரித்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்காக மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக, இந்திய சட்டப்பணிகள் அலுவலர்களாக உள்ளவர்களை நியமிக்கும் வகையில் 2016ஆம் ஆண்டு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் வசந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஏப்ரல் 5) விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த சட்ட அனுபவமும் இல்லாதவர்களை நீதித்துறை உறுப்பினர்களாக நியமிக்க முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.