சென்னை: யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்காக ஆறு மணி முதல் மெட்ரோ ரயில் செயல்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் காலை ஏழு மணி முதல் செயல்படும். யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக நாளை(அக்.4) ஒரு நாள் மட்டும் காலை ஆறு மணி முதல் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.