கரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவில் தற்போது மத்திய, மாநில அரசுகள் ஒருசில தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.
அதன் படி, வருகிற செப்.7ஆம் தேதி முதல் தமிழ்நட்டில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்நிலையில் மெட்ரோ சேவை தொடங்குவதற்கு முன்பாக அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மெட்ரோ அலுவலர்கள் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “சென்னை மெட்ரோ ரயில் பெட்டிகளிலும், ரயில் நிலையங்களிலும் கரோனா பரவலை தடுக்க 100 விழுக்காடு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் சேவை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ஆய்வு! மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகள் அனைத்தும் சக்திவாய்ந்த மின்விசிறிகள் மூலம் காற்று செலுத்தப்படுகின்றன. இதனால் நுண்ணுயிரிகள் கூட அகற்றப்படுகின்றன" என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பிரதீப் யாதவ், “குறைந்த அளவு பயணிகளுடன் மெட்ரோ ரயில் சேவையை இயக்க வேண்டும் என்பதற்காக, பிகாரில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுவதாக தெரிவித்தார். ஒரு முறை மட்டுமே பயணிக்க பயன்படுத்தப்படும் டோக்கன்களுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு, டிராவல் கார்டு மற்றும் QR கோடு முறையை ஊக்குவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:செப். 15 முதல் கல்லூரி இறுதித்தேர்வுகள் - பாரதிதாசன் பல்கலைக்கழகம் உத்தரவு