சென்னையில், தமிழ்நாட்டு நாட்டுப்புற கலைஞர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசுகையில், "இந்த ஆண்டு கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. சிறந்த கலைஞர்களை விடுத்து திறமையற்ற கலைஞர்களை தேர்வு செய்துள்ளனர். இது மிகவும் வருத்தமாக உள்ளது. மூத்த கலைஞர்கள் அதிகளவில் கஷ்டப்படும் நிலையில் முதிர்ந்த கலைஞர்களை கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும்.
'கலைமாமணி விருது தேர்வில் குளறுபடி' - நாடக கலைஞர்கள் புகார்! - நாட்டுப்புற நாடகக் கலைஞர்
சென்னை: சிறந்த கலைஞர்களை தவிர்த்து திறமையற்ற கலைஞர்களை கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்தது வருத்தமளிப்பதாக நாட்டுப்புற நாடகக் கலைஞர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.
File pic
கலைமாமணி விருது தேர்வு செய்யும் கமிட்டியில் உள்ள ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் தங்கவேலுவை நீக்கிவிட்டு கலைத் துறையை சேர்ந்தவர்களை அலுவலர்களாக நியமிக்க வேண்டும். அரசு தங்களுக்கு வீட்டுமனை பட்டா, கல்வி மருத்துவ உதவிகளை வழங்க உரிய ஆவண செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.