தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலைப் பல்கலை. கட்டுப்பாட்டில் அரசுக் கல்லூரிகளை இணைப்பதற்கு வரவேற்பு - அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் நான்கு மாவட்டங்களின் அரசுக் கல்லூரிகளை இணைப்பதற்குத் தமிழ்நாடு அனைத்து அரசுக் கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கராஜ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Annamalai university
Annamalai university

By

Published : Jul 21, 2021, 9:05 PM IST

சென்னை:இது குறித்து தங்கராஜ் கூறியுள்ளதாவது, "தமிழ்நாட்டில் 21 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் 11 பல்கலைக்கழகங்கள் கலை மற்றும் அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளையும், மீதம் உள்ள பல்கலைக்கழகங்கள் மருத்துவம், பொறியியல், கால்நடைகள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளையும் மாணவர்களுக்கு கற்பித்துவருகின்றன.

இதில் வேலூரில் இயங்கிவந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டுவந்தன.

மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றில் ஏற்படும் குறைகளைச் சரிசெய்ய வேலூருக்கு வர வேண்டிய நிலை இருந்தது.

இந்த நிலையில் சென்ற ஆட்சிக் காலத்தில் கடைசி நேரத்தில் விழுப்புரத்தை மையமாகக் கொண்டு மறைந்த முதலமைச்சர் பெயரில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் இன்னும் தனது கட்டுமான பணிகளையும் மாணவர் சேர்க்கை சம்பந்தமான பணிகளையும் தொடங்கவில்லை.

எனவே அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கடலூர் மாவட்ட கல்லூரிகள் இயங்கும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

அரசுடமையாக்கப்பட்ட பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் போதுமான பணிப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த ஆண்டும் மற்ற அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களைபோல் பணியில் தொடர்வதற்கான உடனடி உத்தரவாதத்தினை அளித்தமைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

கௌரவ விரிவுரையாளர்களின் பணி வரன்முறை, கௌரவ விரிவுரையாளர்களுக்கான நிதி ஒதுக்கீடு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சட்ட முதுகலைப் படிப்புக்கான தேர்வு தேதி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details