இந்திய தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை பெருநகர மாநகராட்சி மனநல மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு வாக்களிப்பதற்கான சிறப்பு ஏற்பாட்டினை கடந்த 6 மாதமாக செய்து வருகிறது. அதன்படி மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களின் புரிந்து கொள்ளும் திறன் உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 180 பேர் தேர்வு செய்யப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. அரசு மனநல காப்பகம் மருத்துவமனையில் சிறப்பு வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டு, இவர்கள் ஓட்டு போடுவதற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட கூடுதல் தேர்தல் நடத்தும் அதிகாரி லலிதா செய்திருந்தார். பின்னர், இந்த மையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களித்தனர்.
நாங்க முதல் முறையா ஓட்டு போட்டுட்டோம்..! - பரவசத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோர் - chennai hospital
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பக மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 159 பேர் முதல் முறையாக வாக்களித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது. இந்த மனநல காப்பகத்தில் உள்ள நோயாளிகளுக்கு பல்வேறு சோதனைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் கண்டறியப்பட்டனர். ஒருவர் 6 மாதம் குறிப்பிட்ட பகுதியில் இருந்தால் அங்கு வாக்காளர் அடையாள அட்டையை மாற்றி தர முடியும். அதனடிப்படையில் இங்கு 180 பேருக்கு புதிதாக வாக்காளர் அட்டை அளிக்கப்பட்டது. அவர்களில் இன்று 159 பேர் தங்கள் வாக்கை அளிக்க உள்ளனர். இவர்களுக்கு முறைப்படி வாக்களிப்பதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பிறந்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதல்முறையாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். மனநலம் பாதிக்கப்பட்டவர் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் வரை அனைவரும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள், என்றார்.
கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக நிலையத்தின் முதல்வர் பூர்ணசந்திரா கூறுகையில், இங்குள்ள நோயாளிகளில் தகுதியானவர்களை முறைப்படி ஆய்வு செய்தோம். அவர்களுக்கு புரிந்து கொள்வதற்கான அனைத்து திறமைகளையும் கண்டறிந்த பின்னரே வாக்காளர் பட்டியலில் சேர்த்தோம். இவர்களுக்கும் வாக்களிக்க உரிமை உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த ஏற்பாட்டினை முதன்முறையாக செய்துள்ளோம், என்றார். வாக்களித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், முதல் முறையாக 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் வாக்களித்தது மகிழ்ச்சியாக உள்ளது. பயிற்சி அளித்ததால், சரியாக வாக்களிக்க முடிந்தது, என்று தெரிவித்தனர்.