சென்னை: டெல்லியில் இன்று தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக்கட்சித் தலைவர்களின் குழு ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்றும் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதையும் வலியுறுத்தி கோரிக்கை மனுவினை வழங்கினர்.
இக்குழுவில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பழனிமாணிக்கம், மு.தம்பித்துரை, சட்டப்பேரவை உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை உறுப்பினர்
கோ.க.மணி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து துரைமுருகன் மனு! - மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து துரைமுருகன் மனு
நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதையும் வலியுறுத்தி கோரிக்கை மனுவினை வழங்கினார்.
மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து துரைமுருகன் மனு !