தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”பூஸ்டர் தடுப்பூசி - தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” - chennai mega vaccine camp

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக வரும் தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்
மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்

By

Published : Sep 26, 2021, 4:42 PM IST

சென்னை:ஸ்டான்லி மருத்துவமனையில் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இன்றைய தினம் தேவையான தடுப்பூசி கையிருப்பு உள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் செயல்படுகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 4.43 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். பெரும்பாலான தொற்றுகள் குடும்ப நிகழ்வுகள் மூலம் பரவுகிறது. குறிப்பாக அரியலூர், கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இதுபோன்ற பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

தொற்று அதிகரிப்பு

அதேபோல் திண்டுக்கல், நீலகிரி, தேனி ஆகிய இடங்களில் பணி செய்யும் ரீதியால் தொற்று அதிகரித்துள்ளது. பொழுதுபோக்கு இடங்களான நாகை, விருதுநகர் போன்ற மாவட்டங்களிலும் தொற்று அதிகளவில் பரவுகிறது. சென்னையில் பணி சார்ந்த நிகழ்ச்சிகள், பொழுதுபோக்குகள் போன்ற காரணங்களால் தொற்று சற்று அதிகமாக காணப்படுகிறது.

மேலும் 60 வயதை கடந்தவர்கள் 86 லட்சம் பேர் உள்ளனர். ஆனால் 41.78 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர். முதியவர்களுக்கு விரைவில் தடுப்பூசியை செலுத்த குடும்ப உறுப்பினர்கள் அவர்களை அழைத்து வரவேண்டும். சென்னையில் வீடு தேடி முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்

அதேபோல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலை பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக வரும் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு செய்து தருவதாக உறுதி அளித்துள்ளது என்றார்.

இதையும் படிங்க : மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

ABOUT THE AUTHOR

...view details