தொழிலதிபர் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் நடிகை மீராமிதுன் மீது கொடுத்த புகாரில், ஐபிசி 294( பி) - ஆபாசமாக பேசுதல், 506(1) - மிரட்டல் விடுத்தல் ஆகிய 2 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர் 2019 மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றவர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். முகநூல் வழியாக மீராமிதுனும்- பிரவீனும் கடந்த 2017ல் நண்பர்கள் ஆனவர்கள். பணப்பிரச்னை காரணமாக இருவரும் தற்போது பிரிந்துவிட்டனர்.
பிக்பாஸ் பிரபலம் மீராமிதுன் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு! - meeramithun_casefiled
சென்னை: தொழிலதிபர் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இரண்டு பிரிவுகளில் நடிகை மீராமிதுன் மீது எழும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
meeramithun_casefiled
இந்த நிலையில் தன்னையும், தனது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்த மீராமிதுன் திட்டமிட்டுள்ளதாக பிரவீன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்திருந்தார். அதன் பேரில் தற்போது எழும்பூர் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.