தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீரா மிதுன் ஜாமின் மனு தள்ளுபடி - ஜாமின்

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் பிணை (ஜாமின்) மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Meera Mithun
Meera Mithun

By

Published : Aug 23, 2021, 7:14 PM IST

Updated : Aug 24, 2021, 9:18 AM IST

சென்னை : வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் பிணை மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு
இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆகஸ்ட் 11ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

மீரா மிதுன்
விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், ஆகஸ்ட் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
பிணை கோரி மனுத்தாக்கல்
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு பிணை வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
மீரா மிதுன்
அதில், தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால், கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது, வாய் தவறி பட்டியலின சமுதாயத்தை பற்றி பேசியதாகவும், பிறகு தான் பேசியது தவறு என தெரிந்ததும், தான் பேசியது தவறு என தான் குறிப்பிட்டதாகவும் மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.
பட்டியலின மக்களோடு நட்புறவு
ஆனால், தான் சொல்லாத வார்த்தைகளை பேசியதாக புகார் அளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும், பட்டியலின மக்களோடு தான் நட்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மீரா மிதுன்
பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

உத்தரவாதம்
மேலும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும், சாட்சிகளை கலைக்க மாட்டோம் எனவும் மனுவில் இருவரும் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

மீரா மிதுன்
இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதரார் பேச்சு சமுதாயத்தில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் மோதலை தூண்டும் விதத்தில் உள்ளது.

பிணை வழங்க எதிர்ப்பு

தொடர்ந்து இதே போன்ற குற்றச் செயலில் ஈடுபட்ட வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மீரா மிதுன் மீது ஏற்கனவே 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதே போன்று அவரின் ஆண் நண்பர் இந்த வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர் எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

காவலர் பிடியில் மீரா மிதுன்
அதேபோல புகார்தாரரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு சார்பிலும் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
தள்ளுபடி
அனைத்து தரப்பு வாதங்களை தொடர்ந்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி செல்வகுமார், புலன்விசாரணை ஆரம்ப நிலையிலேயே உள்ளதாகவும், சிறையில்அடைத்து மிகக்குறுகிய காலமே ஆகியுள்ளதாலும் ஜாமீன் வழங்க முடியாது என கூறி இருவரின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க :’சோறே போடல’ - மீரா மிதுன் புலம்பல்

Last Updated : Aug 24, 2021, 9:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details