சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மேற்கொண்டு வந்தது.
இந்திய மருத்துவக் கவுன்சில் அலுவலர்கள் 11 மருத்துவக் கல்லூரிகளையும் ஆய்வு செய்து, விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்களும், நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மாணவர்களும் என மொத்தம் 850 மாணவர்களின் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு அனுமதியத்துள்ளது.
திண்டுக்கல், கிருஷ்ணகிரி, அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் அலுவலர்கள் தெரிவித்த குறைபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளன.
விரைவில் ஆய்வு
இதற்கான ஆவணங்களுடன் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, இந்திய மருத்துவக் கவுன்சில் கூட்டத்தில் கடந்த 7ஆம் தேதி கலந்து கொண்டார்.