தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறைச்சி கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை!

சென்னை: நடை பாதை மளிகை வியாபாரத்திற்கு அரசு அனுமதித்தது போல இறைச்சி கடைகளும் திறக்க அனுமதியளிக்க வேண்டும் என, இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Meat shop open issue
Meat shop owners

By

Published : Jun 4, 2021, 2:31 AM IST

தமிழ்நாட்டில் தற்போது தளர்வுகளற்ற ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் இறைச்சி கடைகள் திறப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அசைவ உணவகங்கள் திறப்பதற்கான அனுமதி இருக்கும் நிலையில் உணவகங்களில் இறைச்சிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனைத் தடுப்பதற்கும், இறைச்சி கடைக்காரர்களின் வாழ்வாதாரம் தடைபடாமல் இருப்பதற்கும் நடைபாதை மளிகை வியாபாரத்திற்கு அரசு அனுமதித்தது போல இறைச்சி கடைகளையும் திறக்க அனுமதியளிக்க வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டன.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் அலி கூறுகையில், " அரசு இறைச்சி கடைகளை திறப்பதற்கான அனுமதி தர வேண்டும்.

ஆன்லைன் மூலமாக அல்லது வாடிக்கையாளரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று சுகாதார விதிமுறைகளின் படி விற்பனை செய்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details