தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சிக்கு தடை - இறைச்சிக்கு தடை

சென்னை: திருவள்ளுவர் தினத்தன்று (16.01.2020) சென்னை மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கூடங்கள் செயல்படவும், ஹோட்டல்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் இறைச்சிகள் விற்பனை செய்யவும் தடை என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

Meat selling banned on thiruvalluvar day
Meat selling banned on thiruvalluvar day

By

Published : Jan 13, 2020, 6:28 PM IST

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் வருகின்ற 16.01.2020 அன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகிறது. இதேபோல் ஆடு,மாடு மற்றும் இதர இறைச்சி விற்பனை செய்பவர்கள், வணிக வளாகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பயன்படுத்தப்பட்ட இறைச்சிகளை விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்படுக்கிறது.

எனவே 16ஆம் தேதி அன்று அனைத்து வணிக வளாகங்கள், இதர பல்பொருள் அங்காடிகளில் பயன்படுத்தப்பட்ட இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டாம் என மாநகராட்சியால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசின் இந்த ஆணையினை வியாபாரிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details