தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்றாவது அணிக்கு மதிமுக செல்லாது - வைகோ - MDMK general secretary Vaiko

சென்னை: மதிமுக மூன்றாவது அணிக்குச் செல்லாது எனவும், திமுகவுடனான உறவை தொடர்வதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உறுதிபடத் தெரிவித்தார்.

மூன்றாவது அணிக்கு மதிமுக செல்லாது - வைகோ
மூன்றாவது அணிக்கு மதிமுக செல்லாது - வைகோ

By

Published : Mar 5, 2021, 3:25 PM IST

Updated : Mar 5, 2021, 5:02 PM IST

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து திமுக, மதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவிவருகிறது.

இந்த நிலையில் மதிமுகவின் தலைமையகமாக தாயகத்தில் அதன் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட கட்சியின் மூத்தத் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

மூன்றாவது அணி நோ

பேச்சுவார்த்தை சுமுகம்

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுவருகிறது. மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்பது குறித்து திமுகதான் கூற வேண்டும்.

மூன்றாவது அணிக்கு மதிமுக செல்லாது - வைகோ

கமல் கூறுவது தவறு

திமுக கூட்டணியில் எங்களை மரியாதையுடன்தான் நடத்துகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு மரியாதை குறைவாக நடத்துவதாக கமல்ஹாசன் கூறுவது தவறானது.

திமுக கூட்டணியில் மதிமுக, விசிக

திமுக கூட்டணியில் அனைத்துக் கட்சிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படுகிறது. மதிமுக மூன்றாவது அணியில் சேராது. திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும்" என உறுதிபடத் தெரிவித்தார்.

மூன்றாவது அணிக்கு மதிமுக செல்லாது வைகோ

திமுக தலைமையிடமிருந்து மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தைக்கு எப்போது அழைப்பு வரும் என மதிமுக சார்பில் தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் மதிமுக சார்பில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Mar 5, 2021, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details