தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைப்புசாரா தொழிலாளர்களை காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் -வைகோ - International Labour Organisation-ILO)

சென்னை: அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனைக் காக்க மத்திய, மாநில அரசுகள் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியறுத்தியுள்ளார்.

vaiko
vaiko

By

Published : Apr 11, 2020, 9:50 AM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா, நைஜீரியா, பிரேசில் ஆகிய நாடுகளில்தான் முறைசாரா தொழிலாளர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.எல்.ஓ.(International Labour Organisation-ILO) கூறி இருக்கிறது. இந்தியாவில் முறைசாரா தொழில்களில் 90 விழுக்காடு பணிபுரியும் 40 கோடி தொழிலாளர்கள் இந்தச் சிக்கலான காலகட்டத்தில் மிக மோசமான வறுமைக்குள் சிக்குவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதாக ஐ.எல்.ஓ. அறிக்கை எச்சரித்துள்ளது.

ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால் பணியிடங்கள் மூடப்பட்டிருப்பதால், உலகம் முழுவதும் இருக்கும் உழைக்கும் தொழிலாளர்களில் 81 விழுக்காடு பேர், அதாவது 5இல் 4 பேர் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியத் தொழிலாளர்கள் நலன்களையும் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா கொள்ளை நோய் தடுப்புக் காலத்தில் கோடிக் கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனைக் காக்க மத்திய, மாநில அரசுகள் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தீரத்துடன் எதிர்நீச்சல் போட்டு கரோனாவிலிருந்து மீண்ட இளைஞர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details