தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துரை வைகோவுக்கு மதிமுக தலைமைக் கழக செயலாளர் பதவி - chennai latest news

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வைகோ, மதிமுக தலைமைக் கழக செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துரை வைகோ
துரை வைகோ

By

Published : Oct 20, 2021, 7:06 PM IST

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் இன்று (அக்.20) நடைபெற்றது. இதில் வைகோவின் மகனுக்கு கட்சியில் பதவி வழங்குவது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் ஆகியோரிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன்படி துரை வைகோ மதிமுக தலைமைக் கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் கணேசமூர்த்தி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கலந்துகொள்ளவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் செய்தியாளர் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு கூட, எனது மகன் அரசியலுக்கு வரமாட்டான் என வைகோ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:22 வயதில் பஞ்சாயத்து தலைவர் பதவி - என்ன செய்ய போகிறார் ஸாருகலா?

ABOUT THE AUTHOR

...view details