தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எம்பிபிஎஸ் படிப்பில் சேர ஆன்லைன் கவுன்சிலிங்' - chennai

சென்னை: தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வை ஆன்லைன் மூலம் நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

'எம்பிபிஎஸ் படிப்பில் சேர ஆன்லைன் கவுன்சிலிங்'

By

Published : Apr 1, 2019, 5:20 PM IST

எம்டிஎம்எஸ் ஆகிய முதுகலை மருத்துவபடிப்பிற்கான கலந்தாய்வினை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துபேசினார். அப்போது "முதுகலைப் படிப்பில் சேர்வதற்கான தரவரிசை அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய இடங்களுக்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். முதுகலை படிப்பிற்கான ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்பட்ட இடங்கள்போக 912 இடங்களில் தமிழக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

அதேபோல் சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில்151 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்த கலந்தாய்வு இன்று துவங்கி 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதுகலைப் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் பெறப்பட்டதில் எந்தவித பிரச்னையும் இல்லை. எனவே எம்பிபிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.



ABOUT THE AUTHOR

...view details